வற்றாப்பளை கண்ண&

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் முதலாம் திகதி  சிறப்பாக இடம்பெறவுள்ளது. 

 
இந்த உற்சவத்தின் முன் நிகழ்வான தீர்த்தமெடுக்கும் நிகழ்வு இன்று  மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என்று ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். 
 
இன்று மாலை தீர்த்தம் எடுக்கப்பட்டு காட்டா விநாயகர் ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளக்கேற்றப்படும். தொடர்ந்து ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடையும். மறுநாள் பொங்கல் உற்சவம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25.5.15 13:21, kommentieren

Werbung


25.5.15 13:18, kommentieren